போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடந்தது.
கரூர்
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்படி நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.இதில் போலீசார் கலந்து கொண்டு போதை பொருள் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது போன்ற அறிவுரைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் பள்ளி, கல்லூரி பாய்ஸ் கிளப் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போதைபொருள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பஸ் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
Related Tags :
Next Story