விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

வனவிலங்குககளை பாதுகாக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், குறைகளை கேட்டறிந்து அதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் பதில் கூறினார்கள். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் வன விலங்குகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாட்டுப்புற பாடலை பாடி, வனவிலங்குகள் குறித்தும், வனங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தினர். வனவிலங்குகள் ஊருக்குள் வருவதற்கு காரணம் என்ன? அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.






