வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை வனச் சரகம் சார்பில் மனித இனம் மற்றும் வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை வனச் சரக அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மகுடி கலைக்குழு மற்றும் மருதம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். இதில் வனவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார் உள்பட வனத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story