விழிப்புணர்வு உறுதிமொழி
தென்காசி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தென்காசி
தென்காசி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சாதிர் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்து தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, ஆணையாளர் பாரிஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார துறை அலுவலர்கள் பாலாஜி, தண்டபாணி, வேலு மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாதவராஜ் குமார், ஈஸ்வரன், மகேஸ்வரன், களப்பணி உதவியாளர் ராஜன், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story