மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

போளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

போளூர்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

போளூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, வட்டார கல்வி அலுவலர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.இ.டி. ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வரவேற்றார்.

ஊர்வலத்தை வட்டார கல்வி அலுவலர் சுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் போளூர் அரசு பெண்களை மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி மாட்டுப்பட்டி தெரு, பஜார் வீதி, சிந்தாதிரிப்பேட்டை தெரு போன்ற முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தன.

ஊர்வலத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும் வருகிற 26-ந் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுமாறும், அரசு நலத்திட்டங்களை குறித்தும் மாணவர்கள் பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

அதேபோல் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் அக்டோபர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் மருத்துவ முகாம் குறித்து தகவல் தெரிவிப்பதற்கும், மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story