சமரச மையம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


சமரச மையம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

சமரச மையம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி

துறையூரில் தமிழ்நாடு சமரச மையம் 18-ம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துறையூர் கோர்ட்டு சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை பஸ் நிலையம் அருகே சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள், நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கும், வழக்கு போடுவதற்கு முன் உள்ள பிரச்சினைகளுக்கும் சமரச மையத்தின் மூலம் தீர்வு காணலாம். தனிநபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு ஆகியவற்றுக்கு சமரச மையத்தை நாடலாம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திருச்சி சாலை வழியாக ஊர்வலமாக நீதிமன்ற வளாகம் வரை வந்தனர். ஊர்வலத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, வக்கீல்கள் சங்க தலைவர் சுரேஷ், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story