பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்


பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்
x

பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருப்புவனம் புதூர் மாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் வண்டல் நகர், கோரக்கநாதர் கோவில், தேரடி திடல், கீழரத வீதி, மதுரை மண்டபம் நெடுஞ்சாலை, யூனியன் அலுவலகம், வழியாக பள்ளியை வந்தடைந்தது. மழைநீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பு அவசியம் குறித்து மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தி வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜாஸ்மின் சாந்தி தலைமையில் ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story