தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருவண்ணாமலையில் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஊர்வலத்தை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) இஸ்மாயில் தொடங்கி வைத்தார்.

இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என 270 பேர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து அறிவியல் பூங்கா வரை நடைபெற்றது.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் ஜவ்வாதுமலை கோடை விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.


Next Story