தேவாரம் அருகே விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம்


தேவாரம் அருகே விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம்
x

தேவாரம் அருகே லயோலா பப்ளிக் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேனி

தேவாரம் அருகே டி.சிந்தலைச்சேரியில் உள்ள லயோலா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சின்னமனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குனர் அந்தோணி, பள்ளி முதல்வர் காட்வின் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், தீவிபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் தீயணைப்பு படைவீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

அப்போது மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கும் தீயணைப்பு படையினர் விளக்கம் அளித்தனர்.


Related Tags :
Next Story