உலக கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தினத்தையொட்டி தூய்மை பாரத இயக்கம் சார்பில் சுகாதார ஓட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கி சுகாதார ஓட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நோட்டுப்புத்தகம், எழுதுபொருட்களை வழங்கினார்.இதேபோல் வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊர்வலம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வெற்றிவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் கஸ்தூரி குஞ்சையன், ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் மதன்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.