கிராம வேளாண் பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி


கிராம வேளாண் பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:46 PM GMT)

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் அ.காளாப்பூர் கிராமத்தில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவிகள் கிராம வேளாண் பணி விழிப்புணர்வு அனுபவத் திட்டத்தில் பல்வேறு செயல்பாடுகளை நிகழ்த்தினர்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் அ.காளாப்பூர் கிராமத்தில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவிகள் கிராம வேளாண் பணி விழிப்புணர்வு அனுபவத் திட்டத்தில் பல்வேறு செயல்பாடுகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் உதவி வேளாண் இயக்குனர் அம்சவேணி மற்றும் அலுவலர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் முன்னிலையில் பட்டுப்புழு வளர்ப்பு முறைகள், தென்னையில் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மண்புழு உரத்தொட்டி அமைக்கும் முறைகள், பஞ்சகாவ்யா மற்றும் மீன் அமிலம் தயாரிக்கும் வழிமுறைகள் போன்றவற்றை விவசாயிகளிடையே செய்முறையாக விவரித்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் மேலும் பல புதிய திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதனால் விவசாயிகள் பல புதிய திட்டங்களை பற்றி தெரிந்து பயனடைந்தனர்.


Next Story