போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி-தொடர் ஜோதி ஓட்டம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தொடர் ஜோதிஓட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தொடர் ஜோதிஓட்டம் நடைபெற்றது.
தொடர் ஜோதி ஓட்டம்
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர் ஜோதி ஓட்டம் நடத்தினர். சத்திரம் பஸ் நிலையம் அருகிலுள்ள இ.ஆர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய தொடர் ஜோதி ஓட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், முசிறி எம்.எல்.ஏ தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொட்டியம்
தொட்டியத்தில் இன்ஸ்பெக்டர் .முத்தையன் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி,் தொட்டியம் கொசவம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், தொட்டியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
காட்டுப்புத்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
போக்குவரத்து கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பொது மேலாளர் சக்திவேல் தலைமையில் நடந்தது. இதில் போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
லால்குடி
லால்குடியில் நடந்த ஊர்வலத்தை ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் துரைமாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார் மற்றும் போலீசார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். லால்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை லால்குடி இன்ஸ்பெக்டர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மணப்பாறை
மணப்பாறையில் போலீசார் சார்பில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பள்ளியில் உள்ள சுமார் 600 மாணவர்கள் சே நோ டூ டிரங் என்ற ஆங்கில எழுத்து வடிவில் நின்று போதையில்லா தமிழகம் படைப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு கையெழுத்து
மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மாணவ - மாணவிகளின் போதை பொருட்களுக்கு எதிராக பதாகையில் விழிப்புணர்வு கையெழுத்திட்டனர். அதனை புகைப்படம் எடுத்து அவரவர் பெற்றோர்களுக்கு அனுப்பி அதை ஸ்டேட்டஸ் ஆக வைத்து அதை பலரும் பார்த்து மனம் மாற்றம் ஏற்படும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.