போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே கடலங்குடியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே கடலங்குடி ஊராட்சி திருவேள்விக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன் கலந்து கொண்டு மகளிர் மற்றும் கிராம பொதுமக்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து பேசினார். மேலும் செல்போன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதனை காவல்துறை மூலம் எவ்வாறு சரி செய்வது இதுபோன்ற பிரச்சினைகளுக்கு போலீஸ் துறையை அணுகி உரிய தீர்வுகாண வேண்டும் என்றார். இதில் குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், குத்தாலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் பாஸ்கர், சதீஷ், கடலங்குடி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், கடலங்குடி ஊராட்சி செயலர் சக்திவேல், உள்ளிட்ட கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story