அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


அருப்புக்கோட்டையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 17 Oct 2023 8:29 PM GMT (Updated: 17 Oct 2023 11:31 PM GMT)

விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரசு ஆஸ்பத்திரியில் நடத்தியது.

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் போக்குவரத்து போலீஸ் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரசு ஆஸ்பத்திரியில் நடத்தியது. அவசர சிகிச்சை பிரிவு முன்பாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். தலைக்கவசம் அணிய வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவர் இளங்கோ, எலும்பு முறிவு மருத்துவர் சோமமூர்த்தி நாகராஜன், தலைமை செவிலியர்கள், பொதுமக்கள், போக்குவரத்து போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story