கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக புதிய கல்வி கொள்கை 2020 மற்றும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் பற்றிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் உதயகுமார் தலைமை தாங்கினார். ஐ.என்.எஸ். ராஜாளி பள்ளிகளுக்கான கல்வி அலுவலர் லெப்டினன்ட் காமாண்டர் அமர் ப்ரீத் சிங் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் அரக்கோணத்தை சுற்றியுள்ள சி.பி.எஸ்.இ. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story