கர்ப்பிணிகள் புத்தகம் வாசிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கர்ப்பிணிகள் புத்தகம் வாசிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் புத்தகம் வாசிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 50 பேர் கலந்து கொண்டு புத்தகம் வாசித்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் புத்தகம் வாசிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 50 பேர் கலந்து கொண்டு புத்தகம் வாசித்தனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா வருகிற 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தஞ்சை அரண்மனை வளாகத்தில் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை மாநகராட்சிக்குபட்பட்ட கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தக திருவிழா குறித்த 'தஞ்சாவூர் வாசிக்கிறது" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 2 நாட்கள் நடை பெற்று வருகிறது. அதில் இந்த மாதத்திற்கான முதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழகத்திலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் முறையாக கல்லுக்குளம் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தாய்மை நூலகம் இயங்கிவருகிறது.

50 கர்ப்பிணிகள் புத்தகம் வாசிப்பு

கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அபாரமாக இருக்கும். அப்போது தாயின் மனநிலை குழந்தைக்கும் அப்படியே பரிமாறப்படும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. அதன்அடிப்படையில் கர்ப்பிணிகள் புத்தகம் படித்தால் அது குழந்தையின் வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும். அதன்படி கர்ப்பிணிகள், பிரசவம் ஆன தாய்மார்கள் ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு நல்ல மனநிலையை உருவாக்கவும், புத்துணர்ச்சி அளிக்கவும் இந்த தாய்மை நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் பங்கேற்ற 50-க்கும் மேற்ப்பட்ட கர்ப்பிணிகளுக்கு படிக்கும் பழக்கும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்க ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. அதன்படி கர்ப்பிணிகள் புத்தகம் வாசித்தனர். இந்நிகழ்ச்சிற்கான ஏற்பாட்டினை கல்லுக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்கள் மற்றும் தாய்மை நூலக பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


Next Story