மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அரகண்டநல்லூர் பகுதியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முரளிதாஸ் ஆகியோர் சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விளக்கினார்கள். தொடர்ந்து அரகண்டநல்லூர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீசார் மற்றும் கல்லூரி பேராசிரியர் லாவண்யா மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து நல்லூர் அருகே உள்ள ஆலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story