பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பெண் பயிற்சியாளர்களை 2023-ம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் சேர்க்கைக்கு அனுமதிக்க நமது தொழில் பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் ஜெயசீலன் பெண்கள் தொழிற்கல்வி பயிலும் நோக்கம் மற்றும் எளிதாக வேலைவாய்ப்பினை பல முன்னணி நிறுவனங்களில் பெறமுடியும் என வருகை புரிந்த பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு விளக்கி பேசினார்.

மரக்கன்றுகள்

தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ரமா பிரபா ஆகியோர் வேலை வாய்ப்புகள் பெறுவது குறித்து பேசினார்.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் வளாகத்தில் அனைத்து தொழில் பிரிவு பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்பிரிவு காட்சிகளை பார்வையிட்டனர். பயிற்சி நிலைய முதல்வர் செல்லக்கனி வரவேற்றார். தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் மரக்கன்றகள் நட்டார். நிகழ்ச்சியில் சூலக்கரை பஞ்சாயத்து தலைவர் புஷ்பம் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story