நெய்விளையில்மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெய்விளையில்மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத்,:
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி நாசரேத் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் நாசரேத் நெய்விளை பகுதியில் பொதுமக்களிடமும்,
'மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், சாலை விதிகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பொதுமக்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.