விலங்குகளால் பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரணமல்லூர், வந்தவாசியில் விலங்குகளால் பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரணமல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலங்குகள் மூலம் பரவக்கூடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆசிரியர் மீனாட்சி தலைமை தாங்கினார். மாவட்ட நல கல்வி அலுவலர் எல்லப்பன் முன்னிலை வகித்தார். பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் கால்நடை டாக்டர் சிவராமகிருஷ்ணன் கலந்து கொண்டு நாய், எலி, பூனை, மாடுகள் ஆகியவை மூலம் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்கி கூறினார்.
பின்னர் விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் காளிச்செல்வம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் இரா.மணி, சுகாதார ஆய்வாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர்சாதிக் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி கால்நடை மருத்துவமனை டாக்டர் தாரணி கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை ஆலோசகர் கு.சதானந்தன், சமூக ஆர்வலர் பா.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முடிவில் செவிலியர் ஸ்டெல்லா நன்றி கூறினார்.