நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடையே நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள்தோறும் நுகர்வோர் குடியுரிமை மன்றங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சோலூர்மட்டம் அரசு பள்ளியில் நுகர்வோர் குடியுரிமை மன்றம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் கவுரவ தலைவர் பசுவராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி நுகர்வோர் அமைப்பின் மாநில இணை செயலாளர் பாலகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு நுகர்வோரின் சட்டங்கள் குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வு அளித்தனர். இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Related Tags :
Next Story