தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தியாகதுருகம் அரசு பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கண்டாச்சிமங்கலம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் லெட்டிஷியா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி தொழுநோய் ஏற்படுவதற்கான காரணம், அறிகுறிகள், பரவும் விதம், ஆரம்பகால சிகிச்சையின் அவசியம் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தொழுநோய் குறித்த பேச்சுப்போட்டி நடத்தி வெற்றி பெற்ற 3 மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் சுகாதார செவிலியர்கள் உஷா, சுமதி, ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.