சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி

குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய மாவட்டகலெக்டர் அலுவலக சாலை போக்குவரத்து பூங்காவில் நேற்று நடந்தது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு கலந்து கொண்டு, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், குழந்தைகளுக்கான பாலியல் தொல்லை, குழந்தை கடத்தல், பெண் சிசுக்கொலை உள்ளிட்ட செயல்கள் குறித்தும், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்தும் பேசினார். குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம் இணையவழி குற்றங்கள், சாலை போக்குவரத்தினால் ஏற்படும் பிரச்சினைகள், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் கீதா குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story