போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் நகர போலீஸ் நிலையம் சார்பாக எருதுக்காரன்பட்டி ஊராட்சியில் பொதுமக்களிடையே போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கள்ளச்சாராயம், சட்ட விரோத மதுபான விற்பனை, கஞ்சா பழக்கம் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story