குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர்
புகழூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பொதுமக்களிடமிருந்து குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என வாங்குவது குறித்து தூய்மை இந்தியா திட்டத்தின் குழு தலைவர் ராஜேஸ்வரி துப்புரவு பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அதேபோல் புகழூர் நகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு தலா 2 குப்பைத் தொட்டிகள் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத்தலைவர் பிரதாபன், நகராட்சி கமிஷனர் கனிராஜ், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story