விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்


விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:00 PM GMT (Updated: 23 Nov 2022 7:01 PM GMT)

தேனியில், பாதுகாப்பான டிஜிட்டல் வங்கி சேவை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

தேனி

தேனி பழைய பஸ் நிலையத்தில், ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதத்தையொட்டி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். வங்கிகளின் பெயரில் வரும் போலியான தொலைபேசி அழைப்புகளை கையாள்வது, டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் பொதுமக்கள், வாடிக்கையாளர்களின் பொறுப்பு, அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனை போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பணம் செலுத்தும் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்தல், பணம் செலுத்தும்போது பெறுபவரின் கோரிக்கை தகவல்களை சரிபார்த்தல், பரிவர்த்தனைக்கு பிறகு வரும் குறுஞ்செய்தியை சரிபார்த்தல், ரசீதுகளை பாதுகாப்பான முறையில் கையாள்வது, ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும் விதம், ரகசிய எண்களை பாதுகாப்பாக வைப்பது, மோசடிகளை தவிர்ப்பது போன்றவை குறித்தும், பணம் தவறவிடப்பட்டால் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், கரூர் வைஸ்யா வங்கி மண்டல பொது மேலாளர் சக்கரவர்த்தி, முதன்மை மேலாளர் செந்தில்குமார், கனரா வங்கி மண்டல அலுவலக கோட்ட மேலாளர் மெய்யப்பன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் மற்றும் வங்கி அதிகாரிகள், சைபர் கிரைம் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story