தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவினையொட்டி பொதுமக்களிடையே தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தீயணைப்புத்துறை காரைக்குடி நிலைய அதிகாரி நவநீத கிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் கூடுமிடங்கள், பள்ளி, கல்லூரிகள், பவர் கிரிட் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு சென்று தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி? அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? விபத்தில் சிக்கியோரை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்த செயல்முறை விளக்கங்களை செய்து காட்டினர். மேலும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

1 More update

Next Story