விழிப்புணர்வு பேரணி
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது
தென்காசி
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் சார்பில் தென்காசியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்த பேரணி ெரயில்வே பீடர் ரோடு, கூளக்கடை பஜார், ரத வீதிகள் வழியாக சென்று காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு முடிவடைந்தது. இந்த பேரணியை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு மதியழகன், தென்காசி துணை சூப்பிரண்டு மணிமாறன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு, செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story