திருக்கோவிலூர் அருகே சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி
திருக்கோவிலூர் அருகே சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதையொட்டி பள்ளி முன்பு நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை சரளா, கல்வி மேலாண்மை குழு தலைவர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று குழந்தைகள் உரிமை தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்பிறகு பள்ளி மாணவிகள் 300 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை ஜோதிலட்சுமி நன்றி கூறினார். பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை சுதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
Related Tags :
Next Story