கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்


கள்ளக்குறிச்சியில்    பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி    கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

பேரணி

கள்ளக்குறிச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதையொட்டி நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு

இதில் கல்லூரி மாணவிகள், அரசு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும் குழந்தைகள் பாதுபாப்புக்கு 1098, பெண்கள் பாதுகாப்புக்கு 181, பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண்கள் பாதுகாப்பு நம்ம காவலன் ஆப், பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு விசாகா அமைப்பு, சமூக சீண்டலை எதிர்த்து நில், பெண்ணென்று நிமிர்ந்து நில் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி ரோடு, கடைவீதி வழியாக மந்தவெளியில் முடிவடைந்தது.


Next Story