வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி


வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
x

நெல்லையில் வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

இந்த பேரணியில் 150 பெண்கள் கலந்து கொண்டனர். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட அறிவியல் மையம் வழியாக சென்று விட்டு மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொண்டு சென்றனர். பேரணியில் மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story