லோக் அதாலத் விழிப்புணர்வு பேரணி
ராதாபுரத்தில் லோக் அதாலத் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருநெல்வேலி
ராதாபுரம்:
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தரப்பினர் முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமுகமான தீர்வு காணும் விதமாக லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராதாபுரத்தில் பேரணி நடந்தது. அங்குள்ள கோர்ட்டில் இருந்து புறப்பட்டு ரதவீதி வழியாக சென்ற இந்த பேரணியில் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள், பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story