பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்துகொண்டவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியியல் வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து கோஷம் எழுப்பியபடி சென்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி சாலை, கடைவீதி வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் நாராயணசாமி, மாரீஸ்வரன், கார்த்திகேயன், கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story