ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காமராஜர் சதுக்கத்தில் இருந்து தொடங்கிய பேரணியை இன்ஸ்பெக்டர் பதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், பிலிப் சார்லஸ், பாலசுப்பிரமணி, சிவகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பேரணி மார்கெட் சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தை சென்றடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என்று விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story