உலக புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
உலக புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், நேற்று முன்தினம், உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, புலிகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பிளாஸ்டிக்கால் உண்டாகும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதற்கு, உதவி வன பாதுகாவலர் செல்வம் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். வால்பாறை ரோடு நா.மூ.சுங்கத்திலில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி அங்கலக்குறிச்சி, புளியங்கண்டி வழியாக ஆழியார் பஸ் நிலையத்தை சென்றடைந்தது. இதில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், வனத்துறை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். பேரணியில், சிலர் புலிவேசம் போட்டு ஆடி சென்றனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், புலியை காப்போம், வனத்தை காப்போம், இயற்கையை அழிக்கும் நெகிழியை (பிளாஸ்டிக் கை) தவிர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும், புலிகளை காப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினர்.