மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறியும் விழிப்புணர்வு பேரணி
கிணத்துக்கடவில் மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கிணத்துக்கடவு வட்டார வள மையம் ஆகியவை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்க ளை கண்டறியும் விழிப்புணர்வு பேரணி கிணத்துக்கடவில் நடைபெற்றது. பேரணிக்கு அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மு.ராதிகா தலைமை தாங்கினார்.
பேரணியை வட்டார கல்வி அலுவலர் க.காளிமுத்து தொடங்கி வைத்தார். பேரணி கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பெரியார் நகர், சிவலோகநாதர் கோவில் வீதி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இதில், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், தேசிய அடை யாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள் அளவிடல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிணத்துக் கடவில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் மாற்றுத்திறனாளி கள் விழிப்புணர்வு முகாம் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக் களிடம் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் கிணத்துக்கடவு வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் சா.ஹெரன், ஒருங்கி ணைப்பாளர் மு.முனீஸ்வரி மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.