மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தினார்.

விருதுநகர்

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தினார்.

ஆய்வு

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. அரசினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பா.ஜ.க.வினருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், மத்திய அரசின் திட்ட செயல்பாடுகள் அதுகுறித்து பா.ஜ.க.வினரின் விழிப்புணர்வு நடவடிக்கை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

குடும்ப ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. பழிவாங்கும் அரசியலை மேற்கொள்கிறது. முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாட்டால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சாலை மேம்பாடு

தமிழகத்திற்கு மட்டும் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் சாலை மேம்பாட்டிற்காக மட்டும் ரூ. 7.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவே செயல்படுத்தப்படுகிறது.

502 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை கடந்த ஓராண்டில் நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து தி.மு.க. அரசு அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் மக்களுக்கு பா.ஜ.க.வின் மேல் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளார். பா.ஜ.க.வினர் பிரதமரின் நலத்திட்டங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முன்னதாக அவர் காமராஜரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story