தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் ராட்சத ஹெல்மெட் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு


தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் ராட்சத ஹெல்மெட் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
x

தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் ராட்சத ஹெல்மெட் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வித்தியாசமான முறையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியே கடந்து செல்லும் பிற வாகன ஓட்டிகளின் கவனத்தில் பதியும் வகையில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு வித்தியாசமான முறையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது,

அதாவது சுமார் 12 அடி உயரமும், சுமார் 600 கிலோ எடையும் கொண்ட பிரமாண்ட ராட்சத ஹெல்மெட் ஒன்று உருவாக்கப்பட்டு சோதனைச்சாவடியின் முகப்பில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளையும் இந்த வித்தியாசமான ஹெல்மெட் விழிப்புணர்வு வெகுவாக கவர்ந்து வருகிறது.


Next Story