காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா
திருவண்ணாமலையில் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
திருவண்ணாமலையில் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
உலச சுற்றுலா தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத் துறையின் சார்பில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயக்கும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 24 மாணவிகள் மற்றும் எம்.டி.எம். குழந்தைகள் இல்லத்தில் இருந்து 256 மாணவர்கள்் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா பஸ்சினை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இருந்து கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு தொப்பி மற்றும் டிபன் பாக்ஸ்களை வழங்கினர். அப்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் அஸ்வினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் உடனிருந்தனர்.