மாநகராட்சி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி


மாநகராட்சி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 18 Oct 2023 1:00 AM IST (Updated: 18 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவரும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் இந்த சட்டம் குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது.

மேயர் கல்பனா, ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் பலகையை வெளியிட்டனர். அத்துடன் இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதன் மூலம் வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொடர்பான வன்முறை நீங்கி, அனைவருடன் நட்போடு பழகி செயல்பட ஏதுவாக அமைந்தது. அத்துடன் பெண் ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டால் செய்ய வேண்டியது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

இதில் துணை ஆணையாளர் செல்வசுரபி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி ஆணையாளர் மாணிக்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story