தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
முசிறி நகராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இதில் கழிவுநீர் தொட்டி மூடியை எப்படி திறக்க வேண்டும், எவ்வாறு திறக்க கூடாது என்றும், பணியின் போது கையுறைகள், முக கவசம் மற்றும் தங்களது விரல்களில் உள்ள நகங்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரவ கழிவு தூய்மை எவ்வாறு நவீன முறையில் பாதுகாப்பாக சுத்தம் செய்வது பற்றி நவீன கருவி கொண்டு செய்முறை பயிற்சி செய்து கட்டினர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார், ஆணையர் கல்யாணி. ஸ்கோப் தொண்டு நிறுவன தலைவர் சுப்பராமன், தமிழ்நாடு நீர் மற்றும் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், காட்டுப்புத்தூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் அருள் குமார், நகராட்சி அமைப்பு ஆய்வாளர் நேதாஜி மோகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுகாதார பணியாளர்களுக்கு குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, மாஸ்க், கையுறை, டிஷ்யூ பேப்பர் ஆகிய பொருட்கள் அடங்கிய மஞ்சப்பை வழங்கப்பட்டது.