தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி


தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
x

தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துைற சார்பில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. இதில், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் முன்னிலையில் வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வானங்கள் வெடிக்கும் போது காலணி அணிய வேண்டும். பட்டாசுகளை மைதானங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும், வெடிக்காத பட்டாசுகளின் குப்பைகளை சேமித்து எரிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல் பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது. இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, ஆசிாியா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story