எண்ணும் எழுத்தும் கற்றலை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


எண்ணும் எழுத்தும் கற்றலை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

ஆரணியில் எண்ணும் எழுத்தும் கற்றலை வெளிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. செய்யாறு கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார்.

ஆரணி வட்டார வளமைய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் கோட்டை தெரு வழியாக பழைய பஸ் நிலையம் வரை சென்றது. பின்னர் அங்கு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது மாணவர்களில் சிலர் டாக்டர், பொறியாளர், போலீஸ் என பல்வேறு விதமான வேடம் அணிந்து வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீ ராமலு, கமலக்கண்ணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஜெயசீலி, வடிவேலன், அய்யாசாமி, சீனிவாசன், சாந்தி, இளமதி, மாயக்குமார், எஸ்.சாந்தி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Next Story