மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அரியலூரில் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட வனத்துறை சார்பில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தடி நீரை சேமிக்க, மரம் வளர்ப்போம் என்பன உள்பட மரம் வளர்க்க வேண்டியதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் எழுதப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் சந்தைப்பேட்டை வழியாக சென்று பழைய பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. முன்னதாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவ-மாணவிகள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில், அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story