இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து


இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
x
திருப்பூர்


கோவையில் இருந்து நேற்று மதியம் இரும்பு தகடு காயில் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு கரூர் நோக்கி காங்கயம் வழியாக வந்தது. லாரியை ராஜபாளையத்தை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் லாரி காங்கயம் போலீஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் வந்த போது, திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் ஏற்றி வந்த இரும்பு தகடு காயில் லோடு சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லேசாய காயம் அடைந்த டிரைவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி கவிழ்ந்த போது அருகில் எந்த வாகனமும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த இரும்பு காயில்கள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் நேற்று மாலை அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story