சோளிங்கர் நகராட்சியில் ஆயுத பூஜை விழா


சோளிங்கர் நகராட்சியில் ஆயுத பூஜை விழா
x

சோளிங்கர் நகராட்சியில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சியில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது. ஆணையாளர் கன்னியப்பன், துணைத்தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கார் மற்றும் தூய்மைப்பணிகான டிராக்டர், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கான பூஜை செய்யப்பட்டது.

இதில் சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். மேலும் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கினார். நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம், மேலாளர் செல்வகுமார், நகராட்சி பணி மேற்பார்வையாளர்கள் ஆனந்தன், தனசேகரன், துப்புரவு ஆய்வாளர் வடிவேல், நகராட்சி பணி ஆய்வாளர் மனோஜ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story