ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம்
புதுக்கோட்டையில் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சார்பில் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் திருக்கோகர்ணம் பாலன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார். முகாமில் ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் மீனா காந்தி தலைமையில் டாக்டர்கள் சரவணன், கீதா மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் பரிசோதனை மேற்கொண்ட 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டன.
மேலும் மரம் மூலிகை மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ., 9 ஏ நத்தம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story