கழுகுமலையில் ஆயுத பூஜை விழா


கழுகுமலையில் ஆயுத பூஜை விழா
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை குட்டிபேட்டை அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு சங்க தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி உருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஆட்டோக்கள் அலங்கரிக்கப்பட்டு மலையை சுற்றி ஊர்வலமாக வந்தனர். விழாவில் பொருளாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் கழுகுமலை மேலபஜார் பகுதி சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் கருணாநிதி தலைமையில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story