அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம்


அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 4:15 AM IST (Updated: 31 Aug 2023 10:36 PM IST)
t-max-icont-min-icon

அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் ரேகா அய்யப்பன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மின்கலன் மூலம் இயங்கும் வாகனம் வாங்குதல், 10-வது வார்டு பெருமாள் கோவில் தெரு முதல் மார்க்கெட் வரை ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் வடிகால் அமைத்தல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3-வது வார்டில் ரூ.20 லட்சத்தில் சிமெண்டு சாலை, வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல், 1-வது வார்டில் உள்ள 1,3,4 குறுக்குத்தெருக்கள், 7-வது வார்டு ராஜாதெரு, 8-வது வார்டு கள்ளர்தெரு, 11-வது வார்டு புதுப்பட்டி போகும் பாதை ஆகிய தெருக்களில் சிமெண்டு சாலை அமைத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story