அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் குடமுழுக்கு
திருவெண்காடு அருகே வேதராஜபுரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே வேதராஜபுரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடைக்கலம் காத்த அய்யனார் கோவில்
திருவெண்காடு அருகே திருநகரி வேதராஜபுரம் கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் குடமுழுக்கு நடந்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவடைந்தது குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக 22-ந் தேதி கணபதி பூஜை, யாக சாலை பூஜைகள் நடந்தது.
இந்த பூஜைகளை திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்தனர். நேற்று காலை 6-ம் கால யாக பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன.
குடமுழுக்கு
பின்னர் மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய யாக குடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.பின்னர் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர், குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.